Advertisment

கொடுவா - மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் நிதின்சத்யா

Kodua - Nitin Sathya playing the lead role again

'சென்னை28’, 'சத்தம் போடாதே', ராமன் தேடிய சீதை' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் நிதின் சத்யா. கடைசியாக 2019-ல் ஆரவ் நடிப்பில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் நடித்திருந்தார். இதனிடையே தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தயாரிப்பில் இதுவரை 'ஜருகண்டி' மற்றும் 'லாக்கப்' போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இந்நிலையில் நிதின் சத்யா மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 'கொடுவா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினரோடு இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 'பேச்சுலர்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Advertisment

ராமநாதபுரம் பகுதியில், இறால் வளர்ப்பு பணியைச் செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை மய்யமாக வைத்து 'கொடுவா' படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்கிறார்.

nithin sathya Samyuktha Menon
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe