vijay antony

ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

Advertisment

சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மிகக் குறுகிய காலத்திலேயே படத்தின் படப்பிடிப்பை படக்குழு நடத்தி முடித்துள்ளது. இத்தகவலை நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

உடனடியாக படத்தின் பின்தயாரிப்பு பணிகளைத் தொடங்க முடிவெடுத்துள்ள படக்குழு, படத்தை ஏப்ரல் மாதம் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.