நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. இப்படத்தை இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலரை கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. ‘ஸ்லம் ஆந்தம்’ என்ற இப்பாடலை இயக்குநர் கௌதம் மேனன், விஜய் ஆண்டனி, பிரேம்ஜி, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.