இயக்குனர்கள், நடிகர்கள், திரைப்பட தொழிலாளர்கள் தொடங்கி பத்திரிகையாளர்கள் வரை அடங்கியது தமிழ் சினிமா உலகம். அந்த உலகத்தில் சமீபத்திய அங்கமாக உருவாகியிருப்பவர்கள் யூ-ட்யூப் ரிவ்யூவர்கள். ஜியோ புரட்சியில்யூ-ட்யூப் பட்டிதொட்டி எங்கும் நன்கு ஃபேமஸான பின்னர், தமிழில் பல திரை விமர்சகர்கள் உருவாகி உள்ளனர். படத்தை பார்த்த பின்னர், அந்த அனுபவத்தைவீடியோவாக எடுத்து பலர் பகிர்கிறார்கள். இதையே தங்கள் தொழிலாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்த யூ-ட்யூப் ரிவ்யூவர்களில் இரண்டு வகை. ஏதேனும் ஒரு ஊடகநிறுவனம் சார்ந்து, அந்த நிறுவனம் நடத்தும் யூ-ட்யூப் சேனலில் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்கள் சிலர். தனி மனிதராக சேனல் தொடங்கி, ரிவ்யூ மட்டுமே செய்து ஒரு பிரபலமாக வளர்ந்தவர்கள் சிலர்.தனிமனிதராக யூ-ட்யூப் சேனல் தொடங்கி ரிவ்யூ செய்வதில்முன்னோடியாக இருப்பவர்கள் ப்ளூ சட்டை மாறன்,பிரசாந்த்இருவரும்தான்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ப்ளூ சட்டை மாறன் என்று அழைக்கப்படும் இளமாறன், தனது மதுரை வழக்கு மொழியால் ஆரம்பத்தில் கவனம் ஈர்த்தவர். யாராக இருந்தாலும் தைரியமாக விமர்சிப்பவர், எந்தப் படத்தையும் நட்சத்திரங்களுக்காகப் பார்க்காமல் தரத்துக்காகப் பார்த்து பாராட்டவோ திட்டவோ செய்பவர் என்னும் பெயரை சம்பாதித்தார்.ஒரு கட்டத்தில் இது எல்லை மீறிஅஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தை கடுமையாக விமர்சித்தார். படத்தை விமர்சிப்பதைத்தாண்டி அஜித்தையும்தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். கடுப்பான அஜித் ரசிகர்கள், சமூக வலைதளத்தில் இவரை திட்டியே ஃபேமஸாக்கினர். விவேகம் விமர்சன வீடியோவின் பார்வை எண்ணிக்கை, மில்லியன்களைத் தாண்டிச் சென்றது. இந்த ஸ்டைலை மெர்சல், செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களிலும் இவர் தொடர, இதை தன் யுக்தியாகப்பயன்படுத்துகிறார் என்று இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மாஸ் ஹீரோக்களானரஜினி,அஜித், விஜய், இயக்குனர்கள்மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரை எல்லாம் இவர் வேண்டுமென்றே விமர்சனம் என்ற பேரில் தாக்குவதாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 'மொட்ட சிவா கெட்ட சிவா' தொடங்கிசமீபத்தில் 'சார்லி சாப்ளின் 2' வரை இவருக்கும் தமிழ் சினிமாவுக்குமான பஞ்சாயத்து இன்னொரு பக்கம் தொடர்கிறது. இதில் முரண் என்னவென்றால் இவரும் திரையுலகைச் சேர்ந்தவரே. உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ள இவர், தான் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் முன்பு சொல்லிவந்தார். 'தவம்' படத்தில்குதிரையில் வரும் வடிவேலுக்காக மக்கள் காத்திருப்பது போல இவரது படத்துக்காக பலர் காத்திருக்கின்றனர்.
'இட்ஸ் பிரசாந்த்' என்ற தனது ட்விட்டர் ஐடி மூலம் அறியப்படும்பிரசாந்தை அவரது ரசிகர்கள் செல்லமாக 'பாண்டா' என்று கூப்பிடுவார்கள். தற்போது 2K கிட்ஸால் இரண்டாம் வெளியீட்டில்கொண்டாடப்படும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை, படம் வெளியானபோதே கொண்டாடி ரிவ்யூ போட்டவர் இவர். அப்போது தொடங்கிய இவரது ரிவ்யூ பயணம் இன்று இவருக்கு திரையுலகில் பல நண்பர்களைப் பெற்றுத்தந்து இவரை பிரபலமானவராக்கியுள்ளது.ப்ளூ சட்டை மாறனை போன்று கடுமையாக விமர்சிக்காமல் இவர் தனிபாணியாக படங்களை விமர்சிப்பார். இடையில் சில ஆண்டுகள், இவர் எல்லா படங்களையும் பாராட்டுகிறார் என்ற குற்றச்சாட்டும் ரசிகர்களிடையே இருந்தது. தற்போது, இவர் தனது வீடியோக்களில் விளம்பரங்களை சேர்க்கும் முறை அவ்வப்போது சர்ச்சையாகப் பேசப்படுகிறது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இவர்கள் வழியில், இவர்களுக்கு அடுத்தபடியாக தனி மனிதனாக யூ-ட்யூப் சேனல் தொடங்கி நடத்தும் கூட்டத்தில் கவனமீர்ப்பவர் ஒருவர்,சமீபத்தில்வைரலாகி வருகிறார். கோடாங்கி என்று அழைக்கப்படும்வடிவேல் முருகன்தான் அவர். 'V Studios' என்ற தனது சேனல் மூலம் திரைப்படங்களைரிவ்யூ செய்கிறார்.ரிவ்யூ செய்பவர்களின் கூட்டம் அதிகரித்த பின்னர், யார் முதலில் ரிவ்யூ வெளியிடுவது என்னும் போட்டி உச்சத்தில் இருக்கிறது. படம் முடிந்ததும் ஸ்டுடியோவுக்கு வந்து அவசரமாக ரிவ்யூ வெளியிட்டனர் சிலர். அவர்களை முந்த, திரையரங்கு வாசலிலேயே விமர்சன வீடியோ உருவாக்கினர் சிலர். தற்போது படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இடைவேளையில்திரையரங்கு ஓய்வறை அருகில் நின்று பரபரப்பாக விமர்சனம் செய்கின்றனர் சிலர்.ஆனால், கோடங்கியோஒரு நாள் கழித்து மிகப்பொறுமையாக ரிவ்யூ போடுவார்.இவரின் நையாண்டி பேச்சு, நையாண்டித்தனம்தான் இவரதுஹைலைட்டே. பிறரது ரிவ்யூ படம் பார்ப்பதா வேண்டாமா என்று முடிவு செய்ய என்றால், இவரது ரிவ்யூ படம் பார்க்காதவர்கள், பார்த்தவர்கள் என்று அனைவரும் ரசிப்பதற்காக.உங்களுக்குப்பிடித்த நடிகரை கோடாங்கி கலாய்த்தால், அதனால் வெறுப்படையாமல் ரசித்து சிரிப்பீர்கள். அப்படியிருக்கும் இவரது வஞ்சப்புகழ்ச்சி.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொதுவாக யூ-ட்யூப்ரிவியூ செய்பவர்கள்சென்னையில் இருந்து செயல்படஇவரோ திருப்பூரில் இருந்துகொண்டு வைரலாகி வருகிறார். தொடக்கத்தில் இவருடைய வீடியோக்கள் சில ஆயிரம் பார்வைகளையே தொட்டன.'சீமராஜா' சூப்பில் தொடங்கியது இவரது வெற்றிப்பாதை. தொடர்ந்துமணி சார் ஜூஸ் கடை, சாமி ஸ்கொயர் கதை விவாதம்,சர்கார் பாண்ட் பேப்பர்என்று இவர் படங்களை கலாய்க்கும் தொனியில் ரிவ்யூ வீடியோக்கள்செம வைரலாயின. இந்த வீடியோக்களுக்குப் பின்னர்இவருடைய பழைய ரிவ்யூக்களும் வியூஸ் ஏறத்தொடங்கியுள்ளன. படம் மோசமாகஇருந்தால், கடுமையாக சாடாமல், விமர்சிக்காமல் அதை நையாண்டியாக வஞ்சப்புகழ்ச்சியோடு இவர் சொல்வது பெரும் பொழுதுபோக்காக இருக்கும். இவரது பார்வையில் 'நல்ல படம் என்பது வெகுஜனத்தை மகிழ்விப்பது' என்று கூறுகிறார். பெரும்பாலான இயக்குனர்கள் செங்கல்பட்டைத் தாண்டி யோசிப்பதில்லை என்று வருத்தப்படுகிறார். இவர் மீதுள்ள எதிர்மறை விமர்சனம், இவர் நாயகிகளை கொச்சையாகவும் இரட்டை அர்த்தத்துடனும் கிண்டல் செய்கிறார் என்பதே.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திரைப்பட விமர்சனம் என்பது ஒரு மிகப்பெரிய கலை, அதற்கென தனி படிப்புகள் இருக்கின்றன. திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளில் விமர்சகர்களுக்கும் திரைப்படம் குறித்த புத்தகங்களை எழுதியவர்களுக்கும் தனி பிரிவு இருக்கிறது. அவையெல்லாம் திரைப்பட ரசனை, அறிவு, திரைப்பட உருவாக்கத்தின் தொழில்நுட்பங்கள், நுணுக்கங்கள் நிறைந்த வேலை. அப்படி விமர்சனம் செய்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால், சாதாரண ரசிகனின் மனநிலையில் பேசி அவர்களை விட புகழ் பெற்று வருகிறார்கள் இவர்கள். மக்களே ஊடகமாகி வரும் காலகட்டத்தில் எந்த மாற்றமும் தவிர்க்கமுடியாததே.