Advertisment

கே.எல் ராகுல் நடிகை அதியா ஷெட்டி விரைவில் திருமணம்?

KL Rahul and Athiya Shetty to tie the knot in January 2023

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருக்கும் கே.எல் ராகுலும்பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். நடிகை அதியா ஷெட்டிதமிழில் '12பி', 'தர்பார்' உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எல் ராகுல்அதியா ஷெட்டியின்காதல்சமீபத்தில் தான் உறுதி செய்யப்பட்டது. அதாவது அதியா ஷெட்டியின் தம்பி கானின் அஹானின் முதல் படமான 'தடாப்' பட விழாவில் தான் இருவரின் காதல் குறித்து சுனில் ஷெட்டி பேசியிருந்தார்.

இந்நிலையில் கே.எல் ராகுலுக்கும் நடிகை அதியா ஷெட்டிக்கும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திருமணம் மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் காண்டாலா மேன்ஷன் இல்லத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களும்சினிமா நடிகைகளும் காதல் வயப்பட்டு திருமணத்தில் முடிவது வழக்கம். இதுவரை ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், விராட் கோலி உள்ளிட்டோர் சினிமா நடிகைகளை திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது கே.எல் ராகுலும் இணையவுள்ளார்.

KL Rahul
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe