Skip to main content

பிரபல நடிகையை காதலிக்கும் வெங்கடேஷ் ஐயர்; வெளியான புதிய தகவல்

Published on 07/04/2022 | Edited on 08/04/2022

 

kkr player venkatesh iyer loves priyanka jawalkar

 

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். 

 

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் பிரபல தெலுங்கு நடிகை பிரியங்கா சல்வாரை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இவர் 'டாக்ஸி வாலா' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  சமீபத்தில் நடிகை பிரியங்கா ஜவால்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த கிரிக்கெட் வீரர் 'க்யூட்' என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு  பிரியங்கா ஜவால்கர் "யாரு நீங்களா?" என பதில் கமெண்ட் செய்திருந்தார். இதை பார்த்த பலரும் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் இருவரும் நீண்ட நாளாகவே காதலித்து வருகின்றனர். இந்த கமெண்ட்ஸ் தற்போது அதனை உறுதி செய்துள்ளது என்ற கோணத்திலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் திரைப்பட நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த பட்டியலில் வெங்கடேஷ் ஐயரும் இணைவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதலிடத்தில் ஷிவம் துபே; கொல்கத்தா வெற்றி

Published on 14/05/2023 | Edited on 14/05/2023

 

Shivam Dube at the top; Kolkata won

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 61 ஆவது லீக் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 144 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 48 ரன்களையும் கான்வே 30 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் தலா 2 விக்கெட்களையும் வைபவ் அரோரா, ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

145 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 147 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிதிஷ் ரானா 57 ரன்களையும் ரிங்கு சிங் 54 ரன்களையும் எடுத்தனர். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டார்.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஷிவம் துபே சஞ்சு சாம்சனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுவரை அவர் 19 சிக்ஸர்களை சுழல் பந்துவீச்சாளருக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ஷர்துல் கிரிக்கெட் வாழ்வில் முதன்முறை; சாதித்தாரா? சோதித்தாரா?

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

For the first time in Shardul's cricketing career; Did succeed? Have checked?

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 39 ஆவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்களை எடுத்தார். இன்னிங்ஸின் இறுதியில் ரஸல் அதிரடி காட்டி 19 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். குஜராத் அணி சார்பில் ஷமி 3 விக்கெட்களையும் ஜொஸ்வா லிட்டில் 2 விக்கெட்களையும் நூர் அஹமத் 2 விக்கெட்களையும் எடுத்தனர். 

 

இன்றைய போட்டியில் ஷர்துல் தாக்கூர் மூன்றாவது பேட்டராக களமிறங்கினார். டி20 கிரிக்கெட்டில் நம்பர் 3ல் களமிறங்குவது இதுவே அவருக்கு முதன்முறை. முன்னதாக 2021 தாக்கூர் சென்னை அணியில் விளையாடிய போது டெல்லி அணிக்கு எதிரான முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் நம்பர் 4 ஆவது பேட்ஸ்மேனாக களம் வந்து  முதல் பந்திலேயே வெளியேறினார். இன்றைய போட்டியிலும் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

 

180 ரன்களை இலக்காக கொண்ட குஜராத் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் மட்டுமே இழந்து 180 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 51 ரன்களையும் சுப்மன் கில் 49 ரன்களையும் மில்லர் 32 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணி சார்பில் ஹர்ஷித் ரானா, ரஸல், சுனில் நரேன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஜோஸா லிட்டில் தேர்வு செய்யப்பட்டார்.