Published on 05/10/2018 | Edited on 05/10/2018

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் தொடங்கிய இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை அறம், குலேபகாவலி ஆகிய படங்களை தயாரித்த கோட்டப்பாடி ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.