Advertisment

“சூர்யாவுக்கு தரவில்லை என்றால் போராடுவேன்” -பிரபல தயாரிப்பாளர்

kjr studios

Advertisment

நடிகர் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் 'சூரரைப் போற்று'. இப்படம் அமேசான் ப்ரைமில் நேற்று வெளியானது. இந்தியாவை தவிர ஒரு சில நாடுகளில் சற்று முன்பாகவும், இந்தியாவில் 10 மணி அளவிலும் இப்படம் வெளியானது.

இந்த படத்தை பார்த்த பலரும் சூர்யாவையும், இயக்குனர் சுதாவையும் பாராட்டி வருகின்றனர். அண்மையில் பாஜவில் இணைந்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ் இந்த படம் குறித்து தெரிவிக்கையில், “சூரரைப் போற்று எல்லாத் துறைகளிலும் உயரே பறந்து கொண்டிருக்கிறது!

ஒரு கோபக்கார இளைஞனாக, ஆர்வமிகு இளம் தொழிலதிபராக, அன்பான கணவனாக அனைத்துக் காட்சிகளிலும் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தான் வரும் ஒவ்வொரும் ஃப்ரேமிலும் தனது முத்திரையைப் பதிக்கிறார்.

Advertisment

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படம் முழுவதும் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிகேத் உடைய ஃப்ரேம்கள் ஓவியங்களைப் போல இருக்கின்றன. கலை இயக்குநர் ஜாக்கி மற்றும் எடிட்டர் சதீஷ் சூர்யா நிச்சயமாக உயரங்களைத் தொடுவார்கள்.

ஊர்வசி அற்புதமாக நடித்துள்ளார். அவர் தான் தோன்றும் காட்சிகளைத் தன் தோளில் சிரமமின்றி சுமந்து நம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்.

இது சூரரைப் போற்று அல்ல, சூர்யாவின் போற்று! அவர் மாறாவாகவே வாழ்ந்துள்ளார். இந்த வருடம் உங்களுக்காக தேசிய விருது காத்திருக்கிறது! இல்லையென்றால், நான் அதற்காக போராடுவேன்!

இறுதியாக, சுதா கொங்கரா! தொலைநோக்குப் பார்வை கொண்ட பெண். இந்தப் படைப்பின் மூலம் உச்சபட்ச நேர்த்தியைச் சம்பாதித்துள்ளீர்கள். சல்யூட்” என்று தெரிவித்துள்ளார்.

kjr studios
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe