sivakarthikeyan

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. திட்டமிட்டபடி வெளியாகவிருந்த இப்படம், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர், ரம்ஜான் தினமான மே 14ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தமுறையும் படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கிடையே ‘டாக்டர்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனத் தகவல் வெளியானது.

Advertisment

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் குறித்து நீங்கள் தினமும் கேட்கிறீர்கள். தயாரிப்பாளராக முழு படமும் முடிந்த நிலையில் கரோனா காரணமாக அதை வெளியிடமுடியாமல் நிறைய பொருளாதார நெருக்கடிகளை நான் எதிர்கொண்டுள்ளேன். படத்தை சரியான முறையில் ரிலீஸ் செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். மற்றொருபுறம், கரோனா இரண்டாம் அலையில் நெருங்கியவர்களை இழந்துகொண்டிருக்கிறேன். இது மாதிரியான நேரத்தில் எதுவும் நிச்சயமில்லை. இந்த நேரத்தில் படத்தின் ரிலீஸ் குறித்து நான் பேச விரும்பவில்லை; புரிந்துகொள்ளுங்கள். வீட்டில் பாதுகாப்பாக இருந்து குடும்பத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment