kjr rajesh

தமிழ் சினிமாவில் பிரபலதயாரிப்பாளர் கொட்டப்பாடிஜே.ராஜேஷ். கே.ஜே.ஆர்ஸ்டூடியோஸ்என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களைதயாரித்து வருகிறார். நயன்தாராவின் ’அறம்’, பிரபுதேவாவின் ’குலேபகாவலி’, சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ ஆகிய படங்களைஇவர் தயாரித்துள்ளார். சமீபத்தில் ’க/பெரணசிங்கம்’ படத்தைதயாரித்திருந்தார். மேலும் அஜித்நடித்த ’விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களைவிநியோகமும் செய்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், இன்று கொட்டப்பாடிஜே.ராஜேஷ், பாஜகவில்இணைந்துள்ளார். தமிழ்நாடு மாநிலபா.ஜ.கதலைவர் எல்.முருகன்முன்னிலையில், அவர்தன்னைபாஜகவில்இணைத்துக் கொண்டார். பாஜகவில்இணையும் புகைப்படங்களைதனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "இன்று பாஜகவில்இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி. மாநிலத்தலைவர் எல்.முருகன் அளித்தவரவேற்பில் நெகிழ்ச்சியடைந்துவிட்டேன். நரேந்திரமோடி அவர்களின்வழிகாட்டுதலை பின்பற்றி கட்சிக்காகவும், மாநிலமக்களுக்காகவும், நாட்டுக்காகவும் கடுமையாக உழைக்கஆர்வமாகஇருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக பாஜகவில்திரையுலகப் பிரபலங்கள் இணைவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஆர்.கே.சுரேஷ், குஷ்பூ, தயாரிப்பாளர் ’பிரமிட்’ நடராஜன்உள்ளிட்டோர் சமீபத்தில் பாஜகவில்இணைந்ததுகுறிப்பிடத்தக்கது.

Advertisment