இந்திய இசைத்துறையில் பிரபல பாடகராக வலம் வருபவர் கே.ஜே.யேசுதாஸ். தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 50,000-க்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக இவரது தெய்வீக பாடல்கள் மிகப் பிரபலமானதாக இருக்கிறது. இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வென்றுள்ளார். மேலும் எட்டு முறை தேசிய விருது வாங்கியுள்ளார். இவரது மென்மையான குரல் ரசிகர்களை இன்றளவும் கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில் யேசுதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான சிகிச்சை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பரிசோதனைக்கு பின் வீடு திரும்புவார் எனவும் தகவல் வந்த வண்ணம் உள்ளது.