Skip to main content

பத்தாண்டுகளுக்கு பிறகு விஜய் ஆண்டனிக்காக செய்த கே.ஜே.ஜேசுதாஸ்

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் 'தமிழரசன்'. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர் சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடை பெற்றது.

 

yesudas

 

இந்நிலையில் தற்போது இரண்டு கட்டமாக நடைபெற்ற படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக இளையராஜா இசையில் ஜெயராம் எழுதிய... 

"பொறுத்தது போதும் 

 பொங்கிட வேணும் 

 

k

 

புயலென வா" என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையில் சமீபத்தில் பதிவானது. 2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் தற்போது பத்து ஆண்டுகள் கழித்து தமிழரசன் படத்தில் பாடியுள்ளார். படத்தில் விஜய் ஆண்டனி பாடும் புரட்சிகரமான பாடலாக இப்பாடல் ஒலிக்கப் போகிறது.

 

 

சார்ந்த செய்திகள்