Advertisment

"முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்" - ஸ்மிருதி வெங்கட்

kishen das smiruthi venkat movie update

Advertisment

ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்க தேஜாவு பட இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் படம் 'தருணம்'.படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து நடிகை ஸ்மிருதி வெங்கட் பேசியதாவது, "எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு நன்றி. இந்தப் படத்தில் இதுவரை நடிக்காத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படம் பெரிய வெற்றிபெறும் என நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி" என்றார்.

நடிகர் கிஷன் தாஸ் பேசியதாவது, "நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப் படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப் படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி." என்றார்

Advertisment

இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் பேசியதாவது, "புகழ் 18 வருடங்களாக நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம்.எனக்காக என்னை நம்பி எல்லாம் செய்வார். அவருக்கு இது வெற்றிப் படமாக அமையும். கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி, தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்றார்.

smruthi venkat
இதையும் படியுங்கள்
Subscribe