/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/137_34.jpg)
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர்,“அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)