Advertisment

"ஜாலி... ஜாலி... ஜாலிதான்" - கிருத்திகா உதயநிதி கலகலப்பு பேச்சு

kiruthiga udhayanidhi talk about Paper Rocket

ஜி 5 ஓடிடி தளம் அமீர் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'நிலமெல்லாம் ரத்தம்', வசந்தபாலன் இயக்கத்தில் 'தலைமை செயலகம்', ஏ.எல் விஜய் இயக்கத்தில் 'ஃபைவ் - சிக்ஸ்- செவன்- எய்ட்', பிரகாஷ் நடிப்பில் 'ஆனந்தம்', ராதிகா சரத்குமார் நடிப்பில் 'கார்மேகம்', கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'பேப்பர் ராக்கெட்' உள்ளிட்ட 10 இணைய தொடர்களை (வெப் சீரிஸ்) வெளியிடவுள்ளது. இந்த தொடர்களை அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், அமீர் வெற்றிமாறன், வசந்தபாலன், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரபட்டாளங்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

இவ்விழாவில் பேப்பர் ராக்கெட் என்ற தொடரை அறிமுகம் செய்த பின் பேசிய கிருத்திகா உதயநிதி, "பேப்பர் ராக்கெட்டில் 7 பாடல்கள் உள்ளது. ஆனால் இதை ஆரம்பிக்கும் போது எங்களுக்கு தெரியாது இந்தனை பாடல் இருக்கும்னு. உண்மையாகவே இந்த மாதிரி படக்குழு கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். அவங்க சொன்ன மாதிரி ஜாலியா போனோம், ஜாலியா ஷூட் பண்ணோம், ஜாலியா முடிச்சிட்டோம். அந்தவகையில்இந்த தொடரில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.

Advertisment

கிருத்திகா உதயநிதி இயக்கும் 'பேப்பர் ராக்கெட்' தொடரில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிகழ்வில் இத்தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் காலை மாலை என்ற முதல் பாடலும் வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் விவேக் வரிகளில்சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

ameer kiruthiga udhayanidhi yuvan shankar raja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe