/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/65_29.jpg)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது இசை ஆல்பங்களை வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில் கார்த்தி இயக்கத்தில்நக்ஷா சரண் மற்றும் சாண்டி மாஸ்டர் கூட்டணியில் "இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்..." என்ற இசை ஆல்பம் உருவாகியுள்ளது. ஸ்டைலானகலர்ஃபுல் நடனத்துடன் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில்,நடிகர் அரவிந்த்சாமி, இயக்குநரும் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகாஉதயநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய கிருத்திகாஉதயநிதி, "நானும் இரண்டு ஆல்பம் பாடல் பண்ணியிருக்கேன். அதனாலதான் என்னை கூப்பிட்டுருக்காங்கன்னு நினைக்கிறேன். இப்போ இசை ஆல்பம் தான் ட்ரெண்டாகிட்டுஇருக்கு, அதனால இந்த பாடலும்நல்லா வந்துரும். இந்த இசை ஆல்பத்தில் பணியாற்றியஎல்லோருக்கும் வாழ்த்துக்கள். இத சொன்னா காண்ட்ரொவெர்ஸி ஆகுமான்னு தெரியல... சாண்டி மாஸ்டரோட "செம்ம போதை..." பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சபாடல்" எனத் தெரிவித்திருந்தார்.அத்துடன்,இந்த ஆல்பத்தை இயக்கிய கார்த்திக் அடுத்ததாக ஆக்ஷன் படம் தான் இயக்கப் போகிறார் என்றும் அவர் பார்த்து முறைத்ததும் பயந்தே போய்விட்டேன் என்றும் பேசி மேடையை கலகலப்பாக்கினார் கிருத்திகாஉதயநிதி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)