/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_33.jpg)
ஜி 5 நிறுவனம் வழங்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'பேப்பர் ராக்கெட்'. இந்த சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு கே.ரேணுகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தரன் குமார் இசையமைத்துள்ள இந்தத்தொடரின் இரண்டு பாடல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் 'பேப்பர் ராக்கெட்' வெப் சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மாற்று திறனாளிகள்ஆசிரமத்திற்கு ஆலோசகராக செல்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவர்களின் விருப்பப்படி, அவர்களை அழைத்து கொண்டு ஒரு பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தின் போது நடந்த சுவாரஸ்யங்களை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது இந்த ட்ரைலர். மேலும் இந்த சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 29-ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதனிடையே, கமல்ஹாசன் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், இந்த சீரிஸின் தலைப்புக்கேற்ப ஒரு பேப்பரில் கைப்பட படக்குழுவினருக்கு வாழ்த்து எழுதி அதை ராக்கெட் வடிவில் செய்து பறக்கவிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவை ஜி 5 நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)