gegess

சியான் விக்ரமின் ‘ஜெமினி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை கிரண். இதைத்தொடர்ந்து அஜித், பிரஷாந்த், கமல்ஹாசன், எஸ்.ஜே. சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் நடித்துப் பிரபலமான இவர், தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்துவருகிறார். அவ்வப்போது நேரலையில் தோன்றும் இவர், ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துவருகிறார்.

Advertisment

அந்த வகையில்சமீபத்தில் அவர் லைவில் தோன்றியபோது, ரஜினிகாந்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்துப் பேசியுள்ளார். அதில்.. "‘பாபா’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை நான் தவறவிட்டேன். அந்த சமயத்தில் நான் ‘ஜெமினி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததால் என்னால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. நடிப்பிலும் நடனத்திலும் அவரை யாராலும் தொட முடியாது என்று இப்போதும் நான் சொல்வேன்" என்றார்.