ராஜாவாக துல்கர் சல்மான்

king of kotha motion poster released

துல்கர் சல்மான் தற்போது ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்க ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து துல்கர் சல்மான் தயாரிக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வீடியோ, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை சுவாரஸ்யமான ஸ்கெட்ச் வடிவில் அறிமுகப்படுத்துகிறது. அதிலும் துல்கர் சல்மானை 'ராஜாவாக' சித்தரித்திருப்பது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் டீசரைவருகிற ஜூன் 28 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.

dulquer salman
இதையும் படியுங்கள்
Subscribe