வதந்திகளை நம்ப வேண்டாம் - அருண் விஜய்

Kindly do not believe any rumors - Arun vijay 

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள்எனப் பட்டியல் எடுத்தால் அதில் என்றுமே விஜயகுமாருக்கு முக்கிய இடம் உண்டு. நாட்டாமை கதாபாத்திரம் என்றாலே நமக்கு விஜயகுமார் ஞாபகத்திற்கு வந்துவிடுவார்.பல படங்களில் நாயகன், நாயகியின் அப்பாவாக நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் விஜயகுமார்.

எல்லோரும் தன் மகன்களை மட்டுமே கதாநாயகனாக களம் இறக்குவார்கள்.ஆனால், இவரது மகன் மட்டுமல்லாது மகள்கள் அனைவரையுமே சினிமாவில் கதாநாயகிகளாக நடிக்க வைத்தவர்.இப்படியான பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரரானவிஜயகுமார்சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகச் சொல்லப்படுகிறது.

நேற்று திடீரென தீவிர சிகிச்சைபிரிவில் இருப்பதாகவும், உடல்நிலை மோசமடைந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகள்பரவி வந்தது.இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், “அப்பா வீட்டில்நலமுடன் தான் இருக்கிறார்.தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்.உங்களின் அன்பு மற்றும் அக்கறைக்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்

arunvijay vijayakumar
இதையும் படியுங்கள்
Subscribe