simbu

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனிடையே பலரும் மக்களுக்குத் தங்களால் முடிந்த அளவுக்கு உதவி வருகின்றனர். பல நடிகர்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்து வருகின்றனர்.

Advertisment

Advertisment

இந்நிலையில் நடிகர் சிம்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனது ரசிகர் ஆனந்தன் என்பவரை மொபைலில் தொடர்புகொண்டு அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

இதுதொடர்பாக சிம்புவின் நண்பரான ஹரிஷ் கல்யாண் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சிம்பு அண்ணாவின் அன்பான செயல். இச்செயல் ஆனந்தனைமகிழ்ச்சியாகவும், நம்பிக்கையாகவும் இருக்க வைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.