Advertisment

52 நாடுகளில், 14 மொழிகளில் வெளியாகும் கிச்சா சுதீப்பின் பிரம்மாண்ட படம் !

Kichcha Sudeep starring Vikrant Rona release date announced

'நான் ஈ' பட புகழ் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் படம் ‘விக்ராந்த் ரோணா’. இப்படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் நடிக்கிறார்.இப்படத்தை அனூப் பண்டாரி இயக்க, ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர்.அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார்.நிரூப் பண்டாரி, நீதா அசோக் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.ஜி.எஃப்’ பட புகழ் சிவக்குமார் படத்தின் செட்களை அமைத்துள்ளார். பிரம்மாண்ட தயாரிப்பில், பன்மொழிகளில், ஆக்சன் அட்வென்சர் படமாக உருவாகும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம், 3-D பதிப்பில், 14 மொழிகளில், 55 நாடுகளில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="659e3c6f-2d69-4c7f-838e-bcb28b6cc96b" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_30.jpg" />

Advertisment

இப்படம் குறித்து இயக்குநர்அனூப் பண்டாரி கூறுகையில்,“விக்ராந்த் ரோணா” திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவென்றே உருவாக்கப்பட்டது. இதன் பிரம்மாண்ட உருவாக்கமும் 3-D பதிப்பு தொழில்நுட்பமும், வெள்ளித்திரையில் அனுபவிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். நாங்கள் அறிமுகம் செய்யும், உலகின் புதிய நாயகனை, விரும்பி ஏற்று ரசிக்கும் பார்வையாளர்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும அதிர்ஷ்டசாலிகள். இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் கவரும் அட்டகாசமான விருந்தாக இருக்கும்" எனத்தெரிவித்துள்ளார்.

Jacqueline Fernandez kicha sudeep
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe