Advertisment

”நீங்க அந்தக் கோவிலுக்கு தாமதமாக மரியாதை கொடுத்திருக்கீங்க” - பத்திரிகையாளரின் கேள்விக்கு கிச்சா சுதீப் ’நச்’ பதில்

Kiccha Sudeep

கிச்சா சுதீப்நடிப்பில் அனுப்பண்டாரி இயக்கத்தில்ஃபேண்டஸிஆக்‌ஷன்அட்வெஞ்சர்ஜானரில்உருவாகி உள்ள படம் 'விக்ராந்த்ரோணா'. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிச்சாசுதீப்பிடம்கே.ஜி.எஃப்படங்களுக்குபிறகு கன்னடசினிமாவிற்குமிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளதே, அதை எப்படிபார்க்கிறீர்கள்எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கிச்சாசுதீப், “ஒரு ஊரில் ஒரு கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு ஒருவர் சென்றுவிட்டுவந்து அந்தக் கோவிலில் வேண்டியதால் நினைத்தது கிடைத்தது என்று சொன்னால் உடனே அந்தக் கோவிலின் மீது மரியாதை கூடும். அந்தக் கோவில் நீண்ட காலமாக அங்குதான் இருக்கிறது. எனவே அந்தக் கோவிலின் மீது குற்றமில்லை. நீங்கள் அந்தக்கோவிலுக்குத்தாமதமாக மரியாதை கொடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள், அவ்வளவுதான். அந்தக் கோவில் எப்போதுமே தன்னுடைய சிறப்பைக் கொண்டிருந்தது. நீங்கள் அதுபற்றிதாமதமாககேள்விப்பட்டுள்ளீர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டுமல்லவா, தற்போது கன்னடசினிமாவிற்குகிடைத்துள்ள மரியாதையை அப்படித்தான் பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Advertisment

kicha sudeep
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe