Advertisment

சிம்புவுடன் கைகோர்த்த கிச்சா சுதீப்

kiccha sudeep Vikrant Rona film teaser Release silambarasan

'நான் ஈ' பட புகழ் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் படம் ‘விக்ராந்த் ரோணா’. இப்படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் நடிக்கிறார்.இப்படத்தை அனூப் பண்டாரி இயக்க, ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர்.அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார்.நிரூப் பண்டாரி, நீதா அசோக் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட தயாரிப்பில், பன்மொழிகளில், ஆக்சன் அட்வென்சர் படமாக உருவாகும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம், 3-D பதிப்பில், 14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

சமீபத்தில் வெளியான படத்தின் க்ளிம்பஸ்வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 2ஆம்தேதி ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளதாகவும், அத்துடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment

actor simbu kicha sudeep
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe