kiccha sudeep signed project of under cheran direction

கன்னட நடிகர் கிச்சா சுதீப்தமிழில் 'நான் ஈ', 'புலி' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர். பின்பு ஹீரோவாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'முடிஞ்சா இவன புடி' படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு எந்த தமிழ் படங்களிலும்அவர் நடிக்கவில்லை.

Advertisment

இதனிடையே கன்னடத்தில் 'கப்ஜா' படத்தில் உபேந்திராவுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படம் கலவையானவிமர்சனத்தையே பெற்றது. சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது.

Advertisment

இந்த நிலையில் 2 தமிழ் இயக்குநர்களுடன் கிச்சா சுதீப் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படமும் இயக்குநர் சேரன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்தஅறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த 'ஆட்டோகிராஃப்’ படத்தை ‘மை ஆட்டோகிராப்’ என்ற தலைப்பில் சுதீப் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேரன் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக 'திருமணம்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ளதாகத்தெரிகிறது. கே.எஸ்.ரவிக்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு 'ரூலர்' என்ற தலைப்பில் தெலுங்கில் ஒரு படம் இயக்கியிருந்தார்என்பது நினைவுகூரத்தக்கது.