Advertisment

“ரசிகர்களைக் கவரும்” - ‘மேக்ஸ்’ படக்குழு நம்பிக்கை

kiccha sudeep max movie trailer launch event

கன்னட நடிகர் கிச்சாசுதீப்நடிப்பில் எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்மேக்ஸ்(MAX). மேலும் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் கிச்சாசுதீப்செயல்பட்டுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின்ட்ரைலர்வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர்எஸ்.தாணு, கிச்சா சுதீப்உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி,தேசிங்பெரியசாமிதென்னிந்தியத்திரைப்பட வர்த்தக சபை மற்றும்இந்தியத்திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவிகோட்டாரக்காராஆகியோர் பங்கேற்றனர்.

Advertisment

அந்நிகழ்ச்சியின்போது எஸ். தாணு,மேக்ஸ்திரைப்படம் அதன் தனிப்பட்ட கதை கூறும் முறையாலும், இசையாலும் ரசிகர்களைக் கவரும் என நம்பிக்கை தெரிவித்தார். பாடல்களை உருவாக்கியஅஜனீஷ்பி.லோக்நாத்-ன் திறமையை அவர் பாராட்டினார். அதன் பின்பு கிச்சாசுதீப்தனது உரையில், அறிமுகஇயக்குனர்விஜய்கார்த்திகேயாவின்கதையைபுகழ்ந்து, தயாரிப்பாளர் தாணு அவர்களின் செல்வந்தமனதைக்குறிப்பிட்டார்.காக்ககாக்க படத்தின் கன்னட உரிமைகளை வாங்கும்போது தாணு அவர்களிடம்நேர்முகமாகச்சந்தித்தஅனுபவத்தைப்பகிர்ந்து, ஒரு காசும் வாங்காமல் அவருக்கு உரிமை வழங்கிய அவரது நற்குணத்தை நினைவுகூர்ந்தார். மேலும், தாணு அவர்கள் கன்னடத் திரைப்படத்துறையிலும் தனதுமுத்திரையைப்பதிக்க வேண்டும் என்பதற்கான விருப்பத்தையும்தெரிவித்தார்.

Advertisment

இயக்குநர்மிஸ்கின்பேசும் போது, தாணு அவர்களுக்கு நன்றி தெரிவித்து, தனது திரைப்படமானட்ரைனில்(Train) விஜய் சேதுபதியுடன் இணைந்து அவருடைய கதை கூறும் கனவுகளை நிறைவேற்ற உதவியதற்கு நன்றியை வெளிப்படுத்தினார். அதேபோல், மேக்ஸ்படக்குழுவுக்கும் வெற்றிக்கானவாழ்த்துக்களைத்தெரிவித்தார். இயக்குநர்கள் ராஜ்குமார் பெரியசாமி மற்றும்தேசிங்பெரியசாமி, தாணு அவர்களின் மேற்பார்வையில் தாங்கள்வளர்ந்திருப்பதைப்பாராட்டி, அவருடன் மீண்டும் வேலை செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

தென்னிந்தியத்திரைப்பட வர்த்தக சபை மற்றும்இந்தியத்திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் ரவிகோட்டாரக்காரா,பேசும் போது விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களில் செயல்படும் அனைவரையும் திரைப்படங்களை நேர்மையாக ஆதரிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். சிறந்த திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்றால்,தயாரிப்பாளர்களுக்குபத்திரிகை மற்றும் ஊடக ஆதரவு முக்கியம் எனவும், படக்குழு அனைவருக்கும்வெற்றிக்காகத்தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

kalaipuli s thanu Kannada movie kicha sudeep mysskin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe