Skip to main content

இந்தி சர்ச்சை: அஜய் தேவ்கானுடனான ட்விட்டர் மோதல் குறித்து சென்னையில் மனம் திறந்த கிச்சா சுதீப்

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

kiccha sudeep about conflict with ajay devgan

 

கிச்சா சுதீப் நடிப்பில்  அனுப் பண்டாரி இயக்கத்தில் ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகி உள்ள படம் 'விக்ராந்த் ரோணா'. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிச்சா சுதீப்பிடம் இந்தி மொழி தொடர்பாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானுடன் ட்விட்டரில் ஏற்பட்ட கருத்துமோதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அஜய் தேவ்கான், ”என்னுடைய ட்வீட்டை படிக்கும்போது நீங்கள் கெட்ட மூடில் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் நான் அவருடன் சண்டை போட்டதுபோல உங்களுக்குத் தெரிந்துள்ளது. அஜய் தேவ்கன் என்னுடைய நண்பர்தான். என்னிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் போன் செய்து கேட்டிருக்கலாம். ட்விட்டர் மாதிரியான பொதுவெளியில் கேட்டால் நானும் பொதுவெளியில்தான் பதில் சொல்ல வேண்டிவரும். 

 

நான் தொடங்கி வைக்காத ஒரு விவாதத்தை எப்படி முடித்தேன் என்பதற்காக என்னைக் குற்றம் சொல்லாதீர்கள். நான் அனைவருக்கும் மதிப்பு கொடுக்கக்கூடியவன். அவருக்கு தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது. அதில் தவறும் இல்லை. அதனால் எல்லாவற்றையும் சொன்ன பிறகுதான் என்னுடைய மொழியில் நான் ட்வீட் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சொன்னேன்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அனைத்து போராட்டங்களிலும் நிற்பேன்" - காவிரி விவகாரம் குறித்து கிச்சா சுதீப்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

kiccha sudeep about cauvery issue

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு, காவிரியிலிருந்து 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் குடிநீர் பிரச்சனை, நீர்ப்பற்றாக்குறை இருப்பதால் உத்தரவைப் பின்பற்ற இயலாது; 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விட முடியும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது. 

 

இதனிடையே காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக் கடந்த 21 ஆம் தேதி தெரிவித்தது. அந்த தீர்ப்பை ஏற்றுக் கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்து விட்டது.

 

இதனால், கர்நாடக அரசைக் கண்டித்து அந்த மாநிலத்தில் கர்நாடக அமைப்புகள், விவசாயிகள் மற்றும் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 22 ஆம் தேதி மண்டியா, அத்திப்பள்ளி டோல்கேட், கிருஷ்ணராஜபுரம், மைசூரு வங்கி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் பகுதிக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாளை (25-09-23) பெங்களூருவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துப் போராட்டங்களிலும் நான் எப்போதும் துணை நிற்பதாகக் கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த ஆண்டும் காவிரி பிரச்சனை தொடங்கிவிட்டது. கன்னட ஆதரவு அமைப்புகள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னட மொழியின் அனைத்துப் போராட்டங்களிலும் நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்.

 

பருவமழை பெய்யாததால், மக்களின் விவசாயம் மட்டுமின்றி விவசாயிகளின் குடிநீருக்கும் கடும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பருவமழையைத் தவிர வேறு குடிநீர் ஆதாரம் இல்லாததால் காவிரியை நம்பியுள்ளோம். நிபுணர்கள் கர்நாடகத்தின் தற்போதைய வறட்சி நிலையைப் பற்றி உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய அரசிடமும் தெரிவிக்க வேண்டும். தமிழக முதல்வர்களுடன் சுமுகமாகப் பேசி இந்தப் பிரச்சனைக்கு தற்காலிகமாகத் தீர்வு காண முடியும் என்று முந்தைய சில முதல்வர்களைப் போலவே நமது முதல்வர் சித்தராமையாவும் கூறியதாகக் கேள்விப்பட்டேன். அவர் தற்போதைய வறட்சி-தண்ணீர் பிரச்சனைக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

 

தமிழக விவசாயிகளுக்குக் குறுவை பயிருக்குத் தண்ணீர் கிடைக்கட்டும். ஆனால் முதலில் கர்நாடகாவில் இருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், கர்நாடகாவின் நிலைமையை மத்திய அரசுக்குப் புரிய வைக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நமது தண்ணீர் நமது உரிமை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

Next Story

"விவசாயிகளின் முதுகெலும்பு நம் காவிரி" - கருத்து தெரிவித்த கன்னட நடிகர்கள்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

shivarajkumar and kiccha sudeep about cauvery issue

 

காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது கன்னட நடிகர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கிச்சா சுதீப், "நம் காவிரி நம் உரிமை. இவ்வளவு ஒருமித்த கருத்துடன் வெற்றி பெற்ற அரசு காவிரியை நம்பும் மக்களை கைவிடாது என்று நம்புகிறேன். நிபுணர்கள் உடனடியாக ஒரு வியூகத்தை வகுத்து நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிலம்-நீர்-மொழிப் போராட்டத்தில் நானும் குரல் கொடுக்கிறேன்" என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

இதையடுத்து ஜெயிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமான கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார், அவரது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளின் முதுகெலும்பு நம் காவிரி . ஏற்கனவே மாநிலத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். இரு மாநில தலைவர்களும், நீதிமன்றமும் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து சுமுக தீர்வு காண வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை" என பேசியுள்ளார்.