நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ரெட் ஹில்ஸ் பைபாஸில் விஜய் பைக் ஓட்டுவதுபோன்ற ஷூட்டிங் வீடியோ வெளியாகி வைரலானது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

vijay

இதனையடுத்து விஜய் நடிக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் யார் யார் பணிபுரிய உள்ளார்கள் என்றும், நடிகர்கள் தேர்வு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெறுவதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.