/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/208_7.jpg)
ஹே சினாமிகா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நடன இயக்குநர் பிருந்தா, அடுத்ததாக தக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஹிருது ஹரூன், பாபி சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கும் நிலையில், கதாபாத்திர அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகை குஷ்பு பேசுகையில், “பிருந்தா மாஸ்டர்தான் உண்மையான தக். பிருந்தாவால் கண்டிப்பாக ஆக்ஷன் காட்சிகளை சுலபமாக எடுக்க முடியும், அவர் அதற்காகவே பழக்கப்பட்டவர். அவர் சிறப்பானதைத் தவிர வேறு எதையும் கொடுக்க மாட்டார். ஒரு பெண் இயக்குனரால் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியுமா என்ற பேச்சை அவர் உருவாக்குவார். ஹே சினாமிகா ட்ரைலரைப் பார்த்தவுடன் அழுதுவிட்டேன். மகள் முன்னேறும்போது ஒரு தாய்க்கு எவ்வளவு பெருமை இருக்குமோ அது மாதிரியான பெருமை எனக்கு இருந்தது. படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)