Advertisment

“35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயணத்தைத் தொடங்குகிறேன்” - குஷ்பு மகிழ்ச்சி

Khushboo new hindi movie update

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இப்போது முக்கிய கதாபாத்திரங்கள்மற்றும் சிறப்பு வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் அவ்னி சினிமேக்ஸ் என்ற தயாரிப்பு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் சுந்தர்.சி இயக்கும் அரண்மனை 4 படத்தை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வரவில்லை.

Advertisment

இந்த நிலையில் ஒரு இந்தி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் குஷ்பு. ஜர்னி (Journey) என்ற தலைப்பில் அனில் ஷர்மா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நானே படேகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எட்டு வயதில் இந்தியில் எனது திரைப்படப் பயணம் தொடங்கியது. அப்போது அனில் ஷர்மா உதவி இயக்குநராக இருந்தார். இன்று அவர் உச்சத்தில் இருக்கிறார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தித் திரைப்படங்களில் மீண்டும் எனது பயணத்தை மீண்டும் தொடங்குகிறேன். இந்த அற்புதமான படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Bollywood KhushbuSundar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe