/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/23_79.jpg)
பிரபல இசையமைப்பாளரின் ஏ.ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான். இவர் 'புதிய மனிதா...' (எந்திரன்), 'காயம்...' (இரவின் நிழல்), 'சின்னஞ்சிறு...' (பொன்னியின் செல்வன் 2) உள்ளிட்ட பாடல்களில் பாடியுள்ளார். இதையடுத்து ஹலிதா ஷமீம் இயக்கி வரும் 'மின்மினி' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.கடந்த மாதம் இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cda0bb67-a03d-4c8e-88d0-3d179b776b18_3.jpg)
இந்த நிலையில் பிரிட்டன் - இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் ஆகியோர் இதில் நடிக்கவுள்ளார்கள். பெண் இயக்குநர் கஜ்ரி பாபர் இயக்கவுள்ள இப்படத்தை இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கவுள்ளனர் .
இந்த படம் இரு பெண்கள் பற்றிய கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோபியா, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர். இவரது வாழ்வையொட்டிய கதை ஒரு பகுதியாகவும் 1990-களில் புலம்பெயர்ந்த பெண்ணின் புனைவு பற்றிய கதை மற்றொரு பகுதியாகவும் படத்தில் இடம்பெறவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் தற்போது கோவாவில் நடந்து வரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் மூலம் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் கதீஜா ரஹ்மான்.
Follow Us