/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/210_12.jpg)
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'.இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத்,ரவீனா டாண்டன்பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வரும் படக்குழு ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும்உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.'கே.ஜி.எஃப்' படத்தில் மிரட்டலான ஹீரோ, வில்லன் என்ற ஆண் கதாபாத்திரத்திற்கு இணையான பவர்ஃபுல் பெண் கதாபாத்திரமும் உள்ளது. இப்படத்தில் வரும் பத்திரிகையாளர் மாளவிகா அவினாஷ், யாஷ் அம்மா அர்ச்சனா, கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரின்பாத்திரங்கள் பலரின் கவனத்தை பெற்றது. இருப்பினும்'கே.ஜி.எஃப் சேப்டர் 1' படத்தின் இறுதியில் வரும் ரவீணா டாண்டனின் ரஷ்மிகஷென் கதாபாத்திரம் மாஸாக காட்டப்பட்டாலும்'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தில் தான் அந்த கதாபாத்திரத்திற்கானவலிமையான கதை இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெண்களின் வலிமை குடித்து வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)