/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/109_12.jpg)
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'.இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத்தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத்,ரவீனா டாண்டன்,பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியகதாபாத்திரங்களில்நடித்துள்ளனர். இப்படம்ஏப்ரல் 14ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர்ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில் தற்போது படத்தின் "அகிலம் நீ..." என்ற அம்மா பாடலைபடக்குழு வெளியிட்டுள்ளது.'கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு அம்மா சென்டிமெண்டும், அம்மா பாடலும் முக்கியபங்காக இருந்தது. ரசிகர்களிடையே பிரபலமான அந்தபாடல் அம்மாவை பிரிந்து வாழும் மகன்களின்காலர் ட்யூனாகவேமாறி போனது. அந்தவகையில்தற்போது'கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் அகிலம் நீ என்ற அம்மா பாடல் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)