உலக புகழ் பெற்ற படத்தின் ரீமேக்குடன் மோதும் 'கே.ஜி.எஃப் 2'

kgf2 and laal singh chaddha movie will be released same day

'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர்கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்குகிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின்முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்'லால் சிங் சத்தா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில்வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அதே நாளில் வெளியாகும் எனப் படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="da281de5-e56a-448c-844a-4492c4893355" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_71.jpg" />

கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்திற்கு இந்திய அளவில் கிடைத்த வரவேற்பைத்தொடர்ந்தஇப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளஇப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்புகளை எழுப்பியுள்ளது. இந்த இருபடங்களும்ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால்சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

kgf 2 yash
இதையும் படியுங்கள்
Subscribe