Advertisment

தொடங்கியது கேஜிஎஃப் 2 ஷூட்டிங்... வைரலாகும் புகைப்படம்...

கடந்த வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட மொழிப் படமான இது, ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

Advertisment

prasanth neel

கன்னட சினிமாவிலிருந்து இத்தனை எதிர்பார்புகளுடன் வெளியான இப்படம் அனைத்து மொழி பேசும் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கன்னட சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு இப்படத்திற்கு இருந்தது, ஷாரூக் கானின் ஜீரோ படத்தை விட வெற்றிகரமாக ஓடியதன் மூலம் தெரிந்தது. தற்போது கேஜிஎஃப் -2 எப்போது வரும், ஷூட்டிங் தொடங்கப்பட்டதா போன்ற பல கேள்விகள் எழுந்த நிலையில் படக்குழு, ஷூட்டிங் தொடங்கப்பட்டு விட்டது என்பதை காட்ட படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் அமர்ந்துகொண்டு படப்பிடிப்பை பார்ப்பதுபோல உள்ளது. விரைவில் நடிகர் யஷ் புகைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

alt="natpuna ennanu theriyuma" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c9d7e6f5-b621-48c6-ab31-6831d98efc98" height="134" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105%20natpuna%20ennaanu%20theriyuma_1.png" width="391" />

கடந்த வாரமே தொடங்கப்பட வேண்டிய இப்படத்தின் ஷூட்டிங், காரணமில்லாமல் தள்ளிப்போய் நேற்றுதான் தொடங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கடந்த வாரம் இப்படத்தில் யஷ்ஷின் தோற்றம் இதுதான் என ஒரு போட்டோ வைரலானது. அதில் கடந்த பாகத்தைவிட அதிகதாடி, நீண்ட தலைமுடி இருக்கிறது. ஆனால், இது உண்மையிலேயே யஷ்தானா என்ற சந்தேகம் இருக்கிறது. படக்குழுவும் அதுகுறித்து தெரிவிக்கவில்லை. இந்த வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

yash kgf
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe