kgf yash

கன்னட திரைப்பட நடிகர் யஷ் நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாகி செம ஹிட்டான படம் ‘கே.ஜி.எஃப்’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் அக்டோபர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்பால், இரண்டாம் பாகத்தின் ரிலீஸுக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

Advertisment

Advertisment

மேலும் இந்தப் பாகத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான சஞ்சய் தத், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தை ஆந்திராவைச் சேர்ந்த லோக்கல் சேனல் ஒன்று எந்த உரிமையும் இல்லாமல் ஒளிபரப்பு செய்துள்ளது. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் ஒளிபரப்பியதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும், தெலுங்கு சேனல் உரிமை யாரிடம் விற்கப்போகிறோம் என்பதை முடிவு செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.