டிராகன் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் 28வது படமாக உருவாகிறது. இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்குகிறார். இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இப்படத்தில் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு 'கே ஜி எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. படத்தின் அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையிலான திரைப்படமாக இது அமையவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'ஏஜிஎஸ் 28' என்று அழைக்கப்படும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பணியாற்றுகின்றனர். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/20/22-2025-08-20-19-12-32.jpg)