கே.ஜி.எஃப்... 'ஒரு கன்னடபடம் டப்ஆகி வருகிறது' என்ற குறைந்த பட்சஎதிர்பார்ப்புடன் வெளியாகி, இந்தியாவையே கவனிக்க வைத்த திரைப்படம் கே.ஜி.எஃப். கதாநாயகனுக்கான பில்ட்-அப் காட்சிகளிலும் வசனங்களிலும் புதிய உயரத்தை காட்டியஇந்தப் படத்தில் நாயகன்'ராக்கி'யாகயஷ்நடித்திருந்தார். நாயகனுக்குத்தரப்பட்டது வெறும் பில்ட்-அப்பாக இல்லாமல் படமும் அந்த அளவுக்கு சிறப்பாக 'மாஸ்'ஸாகஇருந்தது. உருவாக்கம்மிக பிரம்மாண்டமாகவும் அந்த காலகட்டத்தையும் சூழலையும் கண்முன் கொண்டு வந்தும்இருந்தது. டப்செய்யப்பட்ட அத்தனை மொழிகளிலும் இந்தப் படத்தின் வசனங்கள் மீம் மெட்டீரியலாகின. தாய்ப்பாசம் என்றாலே சமீபமாக இந்தப் படத்தின் இசைதான்ஒலிக்கிறது. படம் வெளிவந்தபோது கிடைத்த புகழை விட தொலைக்காட்சிகளிலும் OTTயிலும் வெளியாகி அதிகமாகப் பார்க்கப்பட்டு பாராட்டப்பட்டது இந்தப் படம்.
இப்படியிருக்க,கே.ஜி.எஃப் - சேப்டர்2 வுக்குமிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சஞ்சய் தத் முக்கியவில்லனாக நடிப்பது கூடுதல் சிறப்பு. ஜனவரி8 அன்று படத்தின் டீசர் வெளியாகும்என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று திடீரென டீசரின் ஒரு பகுதி ட்விட்டரில்கசிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுஅறிவித்ததற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக டீசரைவெளியிட முடிவுசெய்யலாம் என்று தெரிகிறது. லீக்கானடீசரை பார்த்த ரசிகர்கள், ராக்கியின் மாஸில் மிரண்டு போயிருக்கின்றனர். வெடித்துகொதிக்கும்துப்பாக்கியில் புகை பற்றவைக்கிறார் ராக்கி. நெருப்பு போன்ற இந்த டீசர்வெளியிடப்படும் முன்பே புகையாகக் கசிந்தது.