Advertisment

'கே.ஜி.எஃப்' பட நடிகர் காலமானார்

kgf movie fame mohan juneja passed away

கே.ஜி.எஃப் படத்தில் நடித்தமோகன் ஜுனேஜா இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கன்னட திரையுலகில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட பிற படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யாஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எஃப்'படங்களில்நடித்து உள்ளார். இந்த படத்தில் 'கேங்க கூட்டிட்டு வர்றவன்கேங்ஸ்டர், ஆனா ஒத்தையா வர்றவன் மான்செஸ்டர்'என்று மோகன் ஜுனேஜா பேசும் வசனம் சிறியவர்கள்முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தஇவர்பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisment

இந்நிலையில் மோகன் ஜுனேஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின்மறைவு கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின்மறைவுக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

kgf kgf 2 yash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe