Advertisment

கே.ஜி.எஃப்.-உடன் கைகோர்க்கும் பாகுபலி! 

prabhas -prasanth kneel

Advertisment

தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணி நடிகரானபிரபாஸ், பாகுபலி1 மற்றும் 2 ஆம் பாகங்களின் வெற்றிக்குபிறகு இந்தியஅளவில் பெரிய நட்சத்திரமாகஉயர்ந்தார். அதனைத்தொடர்ந்து, 350 கோடிரூபாய் செலவில்உருவான, சாஹோபடத்தில் நடித்தார். இப்படம்எதிர்பார்த்தஅளவிற்குவரவேற்பை பெறவில்லை.

சாஹோபடத்திற்கு அடுத்ததாக, பிரபாஸ்தற்போது ராதேஷ்யாம்என்ற படத்தில்நடித்து வருகிறார். இதன்பிறகு, ஆதி புருஷ்படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம்3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட இருக்கிறது. இந்தநிலையில், கன்னடம்தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி, ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 'கே.ஜி.எப்' படத்தின் இயக்குனர், பிரசாந்த்நீல்லோடு, பிரபாஸ்இணைவதாக, தகவல் வெளியானது.

இந்தநிலையில், இவர்கள் இருவரும்இணையும்படத்தின்அதிகாரப்பூர்வ அறிவிப்பு, டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் எனதற்போது தகவல் வெளியாகிவுள்ளது. இப்படம், தென்னிந்தியமொழிகளிலும், இந்தியிலும் வெளியாகும்அனைத்திந்திய படமாகஇருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. மாபெரும்வெற்றிப்படங்களை தந்தகூட்டணி, ஒன்றாக இணைவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்திருக்கிறது. பிரஷாந்த்நீல், தற்போது கே.ஜி.எஃப். படத்தின்இரண்டாம்பாகத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

kgf prabhas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe