Advertisment

பாகுபலி 2 வசூலை முறியடிக்க காத்திருக்கும் கே.ஜி.எஃப்!

கடந்த டிசம்பர் மாதம் ஐந்து மொழிகளில் வெளியான கன்னட படம் கே.ஜி.எஃப். கோலார் தங்க வயலை வைத்து புனைவாய் எடுக்கப்பட்ட இந்த படத்தில் கன்னட ஸ்டார் யஷ் நடித்தார். படம் வெளியான அனைத்து மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னட சினிமாவில் பெரும் செலவில் எடுக்கப்பட்டு, பல திரைகளில் வெளியான படம் இதுதான். படம் வெளியான முதலிலிருந்து, இது பாகுபலியை விட வேர லெவலில் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. பாலிவுட்டில் ஷாரூக் கான் நடிப்பில் வெளியான ஜீரோ படத்துடன் போட்டிப்போட்டு, ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் கன்னட பாக்ஸ் ஆபிஸில் 129 கோடி வசூல் வேட்டை செய்துள்ள படம் என்று பார்த்தால் பாகுபலி 2ஆக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி கேஜிஎஃப் வெளியாகி 28 நாட்களாகியும் படம் வெற்றிகரமாக கர்நாடகாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 125 கோடி கர்நாடகாவில் மட்டும் வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதியிலேயே பாகுபலி 2 சாதனையை முறியடித்துவிடுமாம்.

Advertisment
bahubali 2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe