/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/405_14.jpg)
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளஇப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகாமந்தனா நடிக்க, தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்துதளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்இந்த கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணையவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தளபதி 67 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியாகி பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வரும் கே.ஜி.எஃப் 2 படத்தில் வில்லனாக ஆதீரா என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கமலின் விக்ரம் படத்தின் பணியை முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)