Advertisment

'கே.ஜி.எஃப் 2' படத்தின் புதிய அப்டேட்: விஜய்யின் சாதனையை முறியடிப்பாரா யாஷ்?

KGF Chapter2 Toofan song release march21

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'.இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத்தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத்,ரவீனா டாண்டன்,பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியகதாபாத்திரங்ளில்நடித்துள்ளனர். இப்படம்ஏப்ரல் 14ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' படத்தின் முதல் பாடலான"தூஃபான்..." என்ற பாடல் வரும் 21ஆம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இந்திய முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகள்உள்ளதால் இப்பாடல் வெளியாகி யூடியூபில் பல சாதனைகளைப் படைக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான விஜய்யின் அரபிக்குத்து பாடல் 12 நாளில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்த நிலையில், இதனையாஷின் "தூஃபான்' பாடல் முறியடிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisment

Beast actor vijay yash kgf 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe