kgf2

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான படம் கே.ஜி.எஃப். இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓட, 'கே.ஜி.எஃப் 2' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எகிறியது. தற்போது இந்தபடத்தின் ஷூட்டிங்கானது முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், வருகிற அக்டோபர் 23- ஆம் தேதி உலகம் முழுவதும் கே.ஜி.எஃப் 2 ரிலீஸாக இருப்பதாகசமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.

Advertisment

இந்நிலையில் இந்த படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு இன்று பெங்களூரில் உள்ள கான்டிராவா ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படம் வைரலாகி வருகிறது. 10 நாட்கள் நடைபெறவுள்ள இதன் படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் சண்டை தவிர்த்து மற்ற அனைத்து காட்சிகளையும் ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜ், மாளவிகா உட்பட மற்ற அனைத்து நடிகர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment