
கே.ஜி.எஃப் கன்னட மொழியை தாண்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு டிசம்பர் 21ஆம் தேதி வெளியானது. அனைத்து மொழிகளிலும் புரோமோஷன் வெர லெவலுக்கு செய்யப்பட்டது. படமும் வெளியான பின்னர் ரசிகர்களிடையே பலத்த வரவேறபை பெற்றது. படம் பாகுபலி போல பிரமாண்டமாக இருக்கிறது என்று படத்தை பார்த்து வந்த பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த படம் இரண்டு பாகமாக எடுக்க இருப்பதாக முன்னமே படக்குழு அறிவித்திருந்தது. முதல் பாகமான கேஜிஎஃப் சேப்டர்1 என்ற தலைப்பில் வெளியானது. இரண்டாவது பாகமான சேப்டர் 2 எப்போது ஷூட்டிங் தொடங்க போகிறார்கள். எப்போது படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில், படத்தின் இரண்டாம பாகத்திற்கு தேவையான 15% காட்சிதான் முதல் பாக ஷூட்டிங்கிலேயே எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள 85% இனிமேல்தான் ஷூட்டிங் செய்யப்பட இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கேஜிஎஃப் அத்தியாயம்2 பட ஷூட்டிங் வருகின்ற கோடைகாலத்தில் தொடங்கவுள்ளதாகவும், அதனை அடுத்து படம் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் பணி புரிந்த அனைவருமே தொடர்ந்து இரண்டாம பாகத்திலும் பணி புரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.