Skip to main content

கே.ஜி.எஃப் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published on 21/12/2019 | Edited on 23/12/2019

கடந்த வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட மொழிப் படமான இது, ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
 

kgf


கன்னட சினிமாவிலிருந்து இத்தனை எதிர்பார்புகளுடன் வெளியான இப்படம் அனைத்து மொழி பேசும் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கன்னட சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. 
 
பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு இப்படத்திற்கு இருந்தது என்பது ஷாரூக் கானின் ஜீரோ படத்தை விட வெற்றிகரமாக ஓடியதன் மூலம் தெரிந்தது. தற்போது கேஜிஎஃப் -2 எப்போது வரும் என்று பலரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். கடந்த மே மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெறக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதனால் இந்த படத்தின் ஹைதராபாத்தில் கொஞ்ச நாட்கள் நடைபெற்றது. 

இந்நிலையில் இந்த படத்தில் ஆதிரா என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் தான் நடிக்கிரார் என்று முன்பே படக்குழு அறிவித்தது. அதன்பின் படம் குறித்து எந்தவித தகவல்களும் வெளியாகாத நிலையில், இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகியுள்ளது. கடந்த வருடம் இதே நாளில்தான் கே.ஜி.எஃப் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக்‌ஷன்... பில்டப்... நட்பு - வெளியான சலார் ட்ரைலர்

Published on 01/12/2023 | Edited on 02/12/2023

 

prbhas salaar trailer released

 

கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

 

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த ஜுலை மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது.

 

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீலின் வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகளும், பவர்ஃபுல்லான வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன.  மேலும் நட்பிற்கு முக்கியதுவம் கொடுத்து கதை அமைத்துள்ளனர். கே.ஜி.எஃப் படத்தில் இடம்பெற்றது போல் ஹீரோவிற்கான பில்டப் காட்சிகள் அதிகம் இருக்கின்றன. படத்திற்கான புக்கிங் வருகிற 15ஆம் தேதி முதல் தொடங்குவதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

 

Next Story

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் திடுக்கிடும் தகவல்!

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Shocking information on Thiruvannamalai ATM robbery

 

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஏடிஎம் கொள்ளையில் சிசிடிவி கேமராக்கள் எரித்து சிதைக்கப்பட்டதால் கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீசாருக்கு மிகப்பெரிய சவால்கள் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 8 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.  

 

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி பெங்களூர் மாநிலம் கே.ஜி.எஃப்பில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளை கும்பல் ஒன்று கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், அந்த கொள்ளை சம்பவத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும், திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளும் ஒத்துப்போவதாக போலீஸ் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களைப் பார்க்கும் போது ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு இரண்டு தனிப்படைகள் ஹரியானாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.