Advertisment

ராக்கி பாயின் ஆட்டம் அடுத்து எப்போது தொடங்கும்? - 'கே.ஜி.எஃப் 3' குறித்து வெளியான தகவல்

kgf 3 update

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'கே.ஜி.எஃப் 2'. 'ஹோம்பாலே ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் ரூ.1000 கோடிக்கும்மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, 'கே.ஜி.எஃப்' படத்தின் மூன்றாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தநிலையில், அது பற்றி ஒரு தகவல் தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. 'கே.ஜி.எஃப் 3' படம் வரும் 2025 ஆம் ஆண்டு தான் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் 2026 ஆம்ஆண்டு 'கே.ஜி.எஃப் 3' படம் திரையரங்குகளில் வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், இப்படத்தின் ஐந்தாவது பாகம் முடிந்த பிறகு ஹீரோ கதாபாத்திரத்தில் யஷ்ஷிற்கு பதில் வேறொரு ஹீரோவை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாககன்னட சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

இயக்குநர்பிரஷாந்த் நீல், தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் பிஸியாகவுள்ளார். இப்படத்தைத்தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆரின் 31வதுபடத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kgf 3 yash
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe