
கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான படம் கே.ஜி.எஃப். இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓட, 'கே.ஜி.எஃப். 2' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எகிறியது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கானது முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், வருகிற அக்டோபர் 23- ஆம் தேதி உலகம் முழுவதும் கே.ஜி.எஃப். 2 ரிலீஸாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் பெங்களூரில் உள்ள கான்டிராவா ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டது. அதில் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்ட ஷூட்டிங் புகைப்படம் வைரலானது.
இந்நிலையில் கடைசி கட்ட படபிடிப்பு நாளை தொடங்க உள்ளது. அதில், படத்தின் ஹீரோ யஷ் கலந்துகொள்கிறார் என்று பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள காட்சிகளை இந்த கடைசி கட்ட படபிடிப்பில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஷூட்டிங் முடிவடைந்ததும் ரிலீஸுக்கான இறுதிக்கட்ட பணிகளை உடனடியாக தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.