
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மான்டமாக வெளியான படம் கே.ஜி.எஃப். வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓட, கே.ஜி.எஃப். 2 படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்த படத்தின் ஷூட்டிங்கானது முழு வீச்சில் நடைபெற்றது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளது.
முதலில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது. முன்னதாக அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படத்தினை ரிலிஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக படக்குழு அறிவித்தது.
இப்படத்தில் ‘ஆதிரா’ என்னும் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கே.ஜி.எஃப்-2 படக்குழு ஜூலை 29ஆம் தேதி கொடூரத்தை அறிமுகப்படுத்தபோவதாக தெரிவித்து, புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.