Skip to main content

'கே.ஜி.எஃப் 2' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு 

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

kgf 2 trailer release date announced

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத்,  ரவீனா டாண்டன்   பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக் கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

 

இந்நிலையில்  'கே.ஜி.எஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலின் பிறந்தநாளை முன்னிட்டு  'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி  'கே.ஜி.எஃப் சேப்டர் 2'  படத்தின் ட்ரைலர் வரும் 27 ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இப்படம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்